கொரோனா பாதிப்பில் ஊழியர்கள், நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. சீனாவில் உள்ள வூகான் மாநிலத்தில் ஆரம்பித்த இந்த நோய்த்தொற்று இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது.


இந்நிலையில், இத்தாலியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ட்ரூ ஹெட்நர் கூறுகையில், `மிலான் பகுதியில் எங்கள் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து வருகிறோம். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்' என்று கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனம் ஏற்கெனவே அத்தியாவசியமான பயணங்களைத் தவிர்த்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுடனான பயணங்களைத் தவிர்த்து வந்தது. தற்போது தன் பணியாளர்களை, ஏப்ரல் இறுதிவரை விமானப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல, சுவிட்ஸர்லாந்தில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சென்ற வாரம் உறுதியாகியுள்ளது.

அந்த நிர்வாகம் தனது நிறுவனத்தை மூடாமல் தங்கள் பணியாளர்கள் ஈரான், இத்தாலி, சைனா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த குளோபல் நியூஸ் இனிஷியேட்டிவ் மாநாட்டையும் ரத்து செய்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.