"ஒரு நாள் கலெக்டர்"- அசத்திய பள்ளி மாணவி!!

முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராகத் தீடிரென்று பதவியேற்றுக் கொண்ட நடிகர் அர்ஜுன் ஒரே நாளிலேயே முடங்கி கிடந்த அரசாங்கத்தை தட்டி எழுப்புவார். அந்தப் படம் தமிழகத்தில் பல்வேறு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் எனப் பலர் கற்பனையிலே உலா வந்தனர். இந்த மாதிரியான ஒரு சம்பவம் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நடந்திருக்கிறது.


மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்த புல்தானா மாவட்ட கலெக்டர் சந்திரா ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் பள்ளியில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும், இந்த வாய்ப்பு சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். அந்த அறிவிப்பின் படி ஒரு நாள் கலெக்டராக ஒரு பள்ளி மாணவி தற்போது கலெக்டர் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் என்பதும் சிறப்புக்குரியது. ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த பூனம் தேஷ்முக் என்ற பள்ளி மாணவி தற்போது புல்தானா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றியுள்ளார்.

கலெக்டர் நாற்காலியில் அமர்ந்த பூனம் தேஷ்முக்கிற்கு பொது மக்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், பூனம் தேஷ்முக் “தனது கலெக்டர் பணியை சிறப்பாக செய்துள்ளார்” எனத் கலெக்டர் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதோடு புதிய கலெக்டரின் புகைப்படங்களும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டப் பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நமது நெட்டிசன்கள் தற்போது மகிழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

ஒரு நாள் கலெக்டராகப் பணியாற்றிய பூனம் தேஷ்முக் “எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது கனவு. இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது” என நெகிழ்ச்சி பொங்கத் தெரிவித்து இருந்தார். ஒரு நாள் கலெக்டராகப் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கொடுத்த அம்மாவட்ட கலெக்டர் சந்திராவுக்கு இப்போது பொது மக்களும் நமது நெட்டிசன்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.