148 பேர் இத்தாலியில் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் மூவாயிரத்து 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியிலும் கொரானோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவிற்கு வெளியே, இந்த வைரஸ் தாக்கம் காரணமாக அதிகளவானவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மாத்திரம் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் 58 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயதான பெண் நேற்று உயிரிழந்தார். இது சுவிட்சர்லாந்தில் முதல் கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் கொரோனா அச்சம் காரணமாக, கை கழுவும் சோப்பு, முக கவசம், கழிப்பறை காகிதம் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்தில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இருந்து, சிங்கப்பூர் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான மவுரிடானியாவிற்கு இத்தாலியைச் சேர்ந்த 15 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து சென்பிரான்சிஸ்கோ நோக்கி வந்த, ‘கிராண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலில் 11 ஊழியர்கள், 10 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த கப்பல், கலிபோர்னியா துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஆயிரக்கணக்கான பயணகள் சிக்கியுள்ளனர்.
வட கொரியா, தன் நாட்டு எல்லைகளை மூடியதற்கு, தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது, ‘பயத்தில் நாய் குரைப்பதை போன்ற செயல்’ என, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி, கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தென் கொரிய மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வட கொரிய ஜனாதிபதி கிம், நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இங்கிலாந்திலும், கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். போஸ்னியா, ஹெர்ஜிகோவினா, ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்காவிலும் தலா ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo