புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்த மாணவிகள்!!

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடி தானம் செய்யும் நிகழ்வை `centre for women's study’ மையத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வியாழக்கிழமை ஒருங்கிணைத்தனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்ற இந்நிகழ்வில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முடி தானம் செய்தனர்.


சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பிற மாணவிகளையும் முடி தானம் வழங்க ஊக்குவித்தனர். அதிகளவில் மருந்தை உட்கொள்வதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும். அதை எதிர்கொள்வதற்காக பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதில் ஒரு வழியாக `விக்' செய்வதற்காக முடி தானம் செய்ய பலரும் முன்வந்த வண்ணம் உள்ளனர்.

பெண்கள் அதுவும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் சிகை அழகில் அதிக கவனம் செலுத்துவோராக இருப்பினும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக அளவில் கலந்துகொண்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இயற்கையாக விக் தயாரிக்க நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஒவ்வொரு மாணவர் நன்கொடையாளரிடமிருந்தும் சுமார் 8 அங்குல முடி சேகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வைப் பற்றி முடி தானம் கொடுத்த மாணவிகளிடம் கேட்டபோது, ``நமக்கு இது வெறும் முடி அவர்களுக்கு அது சந்தோஷம். அதை கொடுக்க முடிந்த அளவுக்கு கொடுத்து மகிழ்வோம்” என்றனர்.

மேலும், ``சமூக வலைதளங்களில் புற்றுநோய் தொடர்பான பல விழிப்புணர்வுப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டோம்” என்று கூறினர்.

இந்நிகழ்வில் Naturals முடி திருத்தகத்தின் உரிமையாளர் C.K குமாரவேல் பேசும்போது, ``முடி தானம் செய்வதற்காக வந்தவர்களால் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பலருக்கு புன்னகையையும் நம்பிக்கையையும் தரும்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.