ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானம்!
அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத் திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அத்துடள், 2 ஆயிரம் மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ளும்வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிடார்.
அவர் கூறுகையில், “அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என்றும் எதிர்த் தரப்பினர் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக அவதானம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மூன்று மாதங்களுக்கு அரச செலுவுகளை முன்னெடுப்பதற்காக திறைச்சேறியின் செயலாளருக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதற்கமைய அரசாங்கத்தினால் செலுத்த வேண்டியுள்ள கடன் தொகைகளைச் செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.
இந்நிலையில், புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுக் கடன் பெறுவது தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது, சீனா அபிவிருத்தி வங்கியிலிருந்து ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரையும் 2ஆயிரம் மில்லியன் யென்கயையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வருடங்கள் சலுகை அடிப்படையிலேயே இந்த நிதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்த் தரப்பினர் எம்மால் சர்வதேசத்தில் கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தனர். தற்போது சீனாவுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo