பெண்மை மாபெரும் பெருமிதம் - மகளிர்தின சிறப்பு!!
மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டும் என்ற மூத்தோர் சொல் மிக நிதர்சனமானது. பெண் என்பவள் பெரும்பாலும் தாங்கு தூணாகவும் தயைகாட்டும் பேறாகவுமே விளங்குகின்றாள்.
பெண்மைக்கு மிக உன்னதம் கொடுப்பது தாய்மை. குழந்தையை சுமக்கும் போதிலிருந்து அல்ல, உலகத்தை உணர்கின்ற வயதிலேயே பெண்ணுக்குள் தாய்மை சுடர்விட்டுவிடுகிறது. தனக்குப் பின், தாய் பெற்றுத்தரும் சகோதரர்களுக்கு தாயாகும் பெண்கள் பலருண்டு. அதனால்தான் அக்கா என்பவள் இன்னொரு அம்மா எனக்கூறுகின்றனர்.
கணவனைக்கூட தாய்மையோடு நோக்குதலே பெண்ணின் பண்பு. எந்த ஆணும் வலிக்கும்போதும் துடிக்கும் போதும் தன்னோடு சார்ந்த ஒரு பெண்ணின் மடியில் தலை சாய்த்து ஆறுதல் பெறவே விரும்புவதுண்டு. அது தாயாகவோ, சகோதரியாகவோ தோழியாகவோ மனைவியாகவோ அமைவது அவனது பாக்கியம். மனைவியை தாயாக காணும் ஆண்களும் கணவனை குழந்தையாக கவனிக்கும் பெண்களும் உள்ளவரை இல்லற பந்தம் ஒருபோதும் உயிர்ப்பின்றி போகாது.
மனைவிக்காக மாறும் ஆண்களைவிட கணவனுக்காக தன்னை மாற்றும் பெண்களே உலகில் அதிகமாக உள்ளனர். அது இயல்பானதொன்றே, விட்டுக்கொடுப்பதும் அணைத்து நடப்பதும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம். இவற்றிற்கு விதிவிலக்கும் உண்டு.
ஒரு குழந்தையை தன் கருவில் சுமக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்து ஒரு பெண் உணர்வு ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை அடைய ஆரம்பித்துவிடுகிறாள். கல்யாணத்தின் பின்னர் கணவனுக்காக மாறத்தொடங்கி சிலவற்றை விட்டுவிடுபவள், ஒரு உயிரைச் சுமக்க ஆரம்பிக்கையில் முழுமையான மாற்றத்தை வரித்துக்கொள்கிறாள்.
தனக்கென வாழ்ந்த எண்ணங்களை உதறிவிட்டு தன் குழந்தைக்காக வாழ ஆரம்பித்துவிடுகிறாள். அதனால்தான், கணவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டாலும் அந்த பந்தத்திலிருந்து விடுபட பல பெண்கள் விரும்புவதில்லை. குழந்தைகளுக்காக வாழ்ந்துவிட நினைக்கிறார்கள்.
தான் சார்ந்த அனைத்தையும் பார்த்து பார்த்து கவனிப்பதில் பெண்களின் பங்கு அதிகமே. ஒரே நேரத்தில் வீடு, அலுவலகம் என இரண்டையும் நிர்வகிப்பதில் பெண்ணின் திறனே தனிதான். தவிர,
கணவனை இழந்த பின்னரும் வாழ்வோடு போராட பெண்களுக்கு இருக்கும் தைரியத்தினையும் திடத்தினைப் போலவும் ஆண்களுக்கு இருப்பதில்லை. மனைவியை இழந்த பின்னர் ஆண்களால் அவ்வாறு வாழமுடிவதில்லை. காரணம்.....ஒரு ஆணுக்கு அவனது மனைவியே யாதுமாகி நிற்கிறாள். நல்லதொரு இல்லறத்தில் தன்னை அரணாகநின்று தற்காத்த, அத்தனையையும் பார்த்து பார்த்து செய்த மனைவி இல்லையென்ற உண்மையை ஏற்றுக்கொள்ள ஆண்களால் முடிவதில்லை. சட்டென்று இடிந்துவிடுகின்றார்கள். அந்த வகையில் நோக்கினால் பெண்கள் மனபலம் மிக்கவர்களே.
பெண்கள் பெண்களாக, பெண்மையின் உயர்வினைச் சொல்பவர்களாக, தாய்மையில் பிரகாசிப்பவர்களாக, உன்னதமான குணங்களுக்குச் சொந்தமானவர்களாக வாழவேண்டும். ஏனெனில் பெண்ணிலிருந்துதான் அடுத்த தலைமுறையின் இயக்கம் ஆரம்பமாகிறது, தாய்தான் பிள்ளைக்கு முதல் பாடசாலையாகிறாள். அவளைப் பார்த்துத்தான் குழந்தை தன்னை வடிவமைக்க கற்றுக்கொள்ளும்.
பெண் என்பவள் பொக்கிஷம், ஆனால் இன்று அதிகமான வீதம் அந்த பொக்கிஷங்கள் சீரழிக்கப்படுவதையும், சிதைக்கப்படுவதையுமே காணமுடிகிறது, வலிகளே சில பெண்களுக்கு வாழ்க்கையாகிறது, அந்த வலிகளே சில பெண்களை தடுமாறவும் தடம்மாறவும் வைத்துவிடுகிறது. ஆனால் எல்லைக்கோடுகளுக்குள் தன்னை வரித்துக்கொண்டு வலி சுமந்து வாழும் பெண்களை உலகம் எப்போதும் உச்சரித்தக்கொண்டே இருக்கும். எது எப்படியாயினும் அவளின்றி அணுவும் அசையாது.........
கோபிகை.
ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo