கூட்டமைப்பு மீது உறவுகள் குற்றச்சாட்டு!
உள்ளக விசாரணை தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியைத் தராது என்பது தெரிந்தும் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கியது உறவுகள் குற்றச்சாட்டு
இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன பேரணியிலையே இவ்வாறு தெரிவித்துள்ளனர்
காலை 11:45 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நல்லூரில் அமைந்துள்ள யு என் எச் சி ஆர் அலுவலகம் வரை சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இன்றைய இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், வெளியேறு வலியேறு இராணுவமே வெளியேறு, வெளியேறு.சர்வதேசமே நீதியைப் பெற்றுத்தா, இலங்கை அரசிடம் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்க முடியாது, இராணுவத்திடம் கையளித்த உறவுகளுக்கு என்ன நடந்தது, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், வேண்டாம் வேண்டாம் உள்ளக விசாரணை வேண்டாம் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
வட மாகாணத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர், கடுமையான வெயிலின் மத்தியிலும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் காலை 11.45 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டமானது நல்லூரிலுள்ள யு என் எச் சி ஆர் அலுவலகத்தை சுமார் 2 மணி அளவில் சென்றடைந்து அங்கு அலுவலக பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தனர், அதனைத் தொடர்ந்து இன்று நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மகஜரில் பிரதியை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்கள். போராட்டத்தில் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் ,யாழ் மாநகர மேஜர் ஆனோல்ட், வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர் சுமார் 1400 பேர் வரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மகஜர் முழு விவரம் இணைக்கப்பட்டுள்ளது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணம்.
2020-03-09
கௌரவ மைக்கேல் பேச் லெட் ஜெரியா – ஆணையாளர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை,
சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்துதல்
சிறீலங்கா அரசானது யுத்தத்தின் போதும் யுத்தத்தின முடிவிலும் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களிலும் ஈடுபட்டமைக்கு எதிராக சர்வதேச நீதியை விசாரணையை தமிழ் மக்கள் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி என்னும் பெயரில் ரணில் மைத்திரி அரசாங்கம் அமையப்பெற்ற நிலையில் தமிழர்களது கோரிக்கைகள் புறக்கணிப்பட்டு அதே ஆண்டு செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீதான மேற்படி குற்றச் சாட்டுக்களை விசாரிக்க உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அத்தகைய உள்ளக விசாரணை தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியைத் தராது என்பது நன்கு தெரிந்தும் அத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வடக்கு கிழக்கில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருந்தார்கள். அது மட்டுமின்றி மேற்படி உள்ளக விசாரணை பொறிமுறையை தமிழ் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக கலப்புப்பொறிமுறை உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிழ் மக்களின் பிரிதிநிதிகளால் ஊடகங்கள் ஊடாகப் பொய்யான பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு எமது மக்கள் நம்பிக்கை மோசடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்படி தீர்மானம் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஒருவரேனும கண்டுபிடிக்கப்படவோ, அல்லது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களோ வெளிப்படுத்தபபடவில்லை. மாறாக பொறுப்புக்கூறல் எதுவும் நடைபெறாமலேயே 2017 மார்ச்சிலும் மற்றும் 2019 மார்சிலும் கால நீடிப்பு அல்லது சர்வதேச கண்காணிப்பு நீடிப்பு செய்யப்பட்டது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக் கால நீடிப்பை பெற வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதல் இன்றி ஓஎம்பி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டது. ஏழ்மை நிலையிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை அச்சுறுத்தியும், அழுத்தங்களை ஏற்படுத்தியும் ஒஎம்பி அலுவலகங்கள் வழங்கும் மரணச்சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சிகளே தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. கால நீடிப்புத் கோரும் சந்தற்ப்பங்களில் மேற்படி காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக உருவாக்கத்தையும், மற்றும் பொறுப்புக் கூறலுடன்தொடர்பற்ற வேறு சில விடயங்களையும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் என அறிக்கையிட்டதன் மூலம் தொட்ச்சியான கால நீடிப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் அரசு பெற்றுக் கொண்டது. இதன் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன் நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் -பாதிக்கப்பட்ட தரப்பினராகிய நாம் – ஏற்றுக்கொள்ளும் தீர்வை வழங்கவில்லை என்பதுடன் – 30/1 தீர்மானமும் அதனை வழங்கவில்லை என்பதும் ஒருபுறமிருக்க – பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மிகவும் ஏமாற்றத்தைத் தரக்கூடிய தீர்மானத்தைக்கூட நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசு தயாரில்லை என்பதையும், எவ்வித சந்தேகமின்றி நிரூபித்துமுள்ளனர்.இந்நிலையில் பொறுப்புக் கூறல் விவகாரத்தை தொடா்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்குவதன் மூலம் 30/1 தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள உள்ளக விசாரணை மூலம் ஒருபோதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்குநீதி கிடைக்காது. மேலும் 2006ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைத்துச் சம்பவங்களுக்கும், அப்பாவிப பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சரணடைந்த போராளிகள் மற்றும் அவர்களது பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டமைக்கும் முழுமையாக் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது நாட்டின் அதிஉயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். இந்தப் பின்னணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோருவதோ – தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோருவதோ மனித குலத்துக்கெதிரான போர் குற்றங்களுக்கு நீதி கோருவதோ –சிறிலங்கா அரசின் பங்களிப்போடு ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. அத்துடன் சிறிலங்கா அரசு அத்தகையமுயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 30/1 தீர்மானத்திற்குவழங்கிய இணை அகுனுசரணையாளர் நிலையிலிருந்து சிறீலங்கா அரசு வெளியேறியுள்ளது. ஆரம்பத்திலிருந்து மனித உரிமைப் பேரவையினூடாக பொறுப்புக்கூறல் விவகாரத்தில் நீதிகிடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டி வந்திருந்தபோதும் இத்தீர்மானங்களை நிறைவேற்றும் சர்வதேச நாடுகள் பாதிக்கப்பட்ட தரப்பாகிய எமது கருத்தை பொருட்படுத்தாமல் – தங்களது தமிழ் அரசியல் முகவர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய விடயத்தை முடக்கி வைத்திருந்தார்கள்.தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை – ஒரு பிரயோசனமுமற்ற வகையில் மனித உரிமைப் பேரவையில் முடக்கி வைத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும்.எனவே தங்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகஅவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேசகுற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ நடாத்துவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் உடனடியா மேற்கொள்ள வேண்டுமேன தங்களை மிகவும் பணிவுடன் வேண்டுகின்றோம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo