கழிவுகளை வீதியில் வீசிய நபருக்கு நேர்ந்த கதி!!
ஹோமாகம, மாவத்கம பிரதேசத்திலுள்ள கிளை வீதியொன்றில் திருட்டுத்தனமாக குப்பைகளை இட்டுச்சென்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் வீசிய குப்பை பையிலிருந்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாவனையின் பின் குழந்தைகளுக்கான பம்பர்ஸ் அடங்கிய ஐந்து பைகள் இவ்வாறு வீதியில் இட்டுச் செல்லப்பட்டிருந்த நிலையில், குறித்த பைகளை பிரதேசவாசிகள் சோதனையிட்டபோது அதிலிருந்து தொலைபேசி இலக்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் அந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு சந்தேகநபரை அவ்விடத்துக்கு வரவழை த்துள்ளனர்.
அதன் பின்னர் அந்நபரிடம் பொலிஸர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, அந்நபர் ஹோமாகம, உடுவன பிரதேசத்தில் பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை நடத்திச்செல்பவர் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரொருவரை வரவழைத்து சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் , குறித்த கழிவுகளை அந்நபரின் காரிலேயே ஏற்றி அனுப்பிவைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo