கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமை!
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று (10) காலை நாட்டுக்கு வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை இவ்வாறு இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் Batticaloa Campus இல் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.