பயணிகள் அற்ற நிலையில் விமானங்கள்!!

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக பயணிகள் அற்றநிலையில் விமானங்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வேர்ஜின் அட்லாண்டிக் தெரிவித்துள்ளது.


ஹீத்ரோ போன்ற முக்கிய விமான நிலையங்களில் விமானப் பறப்புக்கள் மற்றும் தரையிறக்கங்களுக்காக இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளவதற்காக வேர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் விமானங்களை இயக்குகின்றது.

முக்கிய விமான நிலையங்களில் தங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்காக பயணிகள் அற்றநிலையில் ஏனைய விமான நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐரோப்பிய சட்டத்தின் கீழ், விமானங்கள் இயக்கப்படாவிட்டால், இடங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

இங்கிலாந்தின் போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ் ஐரோப்பிய ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் விமான நிலையங்களில் இடங்களின் ஒதுக்கீடு குறித்த விதிகளைத் தளர்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக சமீபத்திய வாரங்களில் விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சில வழித்தடங்களில் பயணிகள் இல்லாததால் சில விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்துச் செய்கின்றன.

இதனால் அந்த நிறுவனங்களுக்கு கடுமையான பிரச்சினை ஏற்படக்கூடும், குறிப்பாக அவை பெரிய அல்லது அதிக நெரிசலான விமான நிலையங்களிலிருந்து வெளியேறினால் ஐரோப்பியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச வழிகாட்டுதல்களின் கீழ், விமான நிலையங்களில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கும் இடங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இங்கிலாந்தில், ஹீத்ரோ, கற்விக், ஸ்ரான்ஸ்ரெட், மன்செஸ்ரர், லூற்ரன் மற்றும் லண்டன் சிற்றி விமானநிலையங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இந்த விமான நிலையங்களில் கடந்தகால உரிமைகளின்படி இடங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக குறித்த ஒரு விமான நிறுவனம் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் ஒரு குறிப்பிட்ட அட்டவணையை இயக்கியிருந்தால், இந்தக் கோடையில் அதே இடங்களுக்கான உரிமையை அது தக்க வைத்துக்கொள்ளும்.

நன்றி bbc.co.uk

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.