முன்னாள் எம்.பிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து கைக்குண்டு மீட்பு!

இத்­தோப்பு, ஹம்­பாந்­தோட்டை மாவட்ட முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நிரு­பமா ராஜ­பக்­ ஷ­வுக்கு சொந்­த­மா­ன தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


நிரு­பமா ராஜ­பக்­ ஷ­வுக்கு சொந்­த­மா­ன வீர­கெட்­டிய, கொந்­த­கல வளவ்வ என்ற இடத்தில் உள்ள தென்­னந்­தோப்­பி­லி­ருந்து நேற்­று­முன்­தினம் இரவு குறித்த கைக்­குண்டு மீட்­கப்­பட்­டுள்­ள­தாகவும் வீர­கெட்­டிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

­தென்­னந்­தோப்பின் காவ­லா­ளியின் தக­வ­லுக் ­க­மைய, பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளில், அது எஸ்.ஜி வகை கைக்­குண்டு எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த தோட்­டத்­துக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்­டுக்கு சென்­று­ கொண்­டி­ருந்­த­போது, சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் காணப்­பட்ட பையொன்றை திறந்து பார்த்துள்ளார்.

இதன்போது அதில் கைக்­குண்டு இருப்­பதைக் கண்டு பயந்த குறித்த பெண் காவ­லா­ளிக்கு தகவல் தெரி­வித்­ததை அடுத்து காவ­லாளி பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

இந்நிலையில் குறித்த கைக்­குண்டு கறுப்பு பை ஒன்றில் இருந்த நிலையில் மீட்­ட­தா­கவும், குண்­டு­மீட்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து 800 மீற்றர் தொலைவில் வீடொன்று காணப்­படும் நிலையில், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்டு குண்டு பாது­காப்­பாக செய­லி­ழக்கச் செய்­யப்­பட்­ட­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதனையடுத்து வீதி­யி­லி­ருந்து எவரேனும் குறித்த கைக்குண்டை தூக்கி வீசியிருக்காலம் என சந்தேகம் வெளியிட்டுள்ள வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.