மகிந்த ஓய்வுபெற வேண்டும் - தலைமைத்துவத்தை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் - அத்துரலியே ரதன தேரர்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் எனவும் இதுவே தற்போது நாட்டு மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஓய்வுபெற வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவர் ஓய்வுபெற்று தலைமைத்துவத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும். அப்போது பிரச்சினை தீர்ந்து விடும். இதுதான் நாட்டின் கோரிக்கை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஜனாதிபதிக்கு வழங்குங்கள். ஜனாதிபதி இலகுவாக பணியாற்ற வசதிகளை கொடுங்கள் போதும், கோட்டாபய ராஜபக்ச புதிய தலைவர் என்ற வகையில் செயற்பட இடமளியுங்கள்.

மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் எம்மை பொதி செய்து ஒரு புறம் ஒதுக்கி வைக்க முடியும் என நினைக்கின்றனர். அது கஷ்டமானது. எம்மை ஒதுக்கி வைக்க முடியாது எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.