மூன்றாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட மூன்றாவது நபர் இன்று இனங்காணப்பட்டுள்ளார்.


இதனை தொற்று நோய் தடுப்புப் பிரிவு உறுதிசெய்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கே இவ்வாரு இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

குறித்த நபர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

தற்சமயம் அவர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
Blogger இயக்குவது.