கொரோனா பாதிப்பை தடுக்க உலகநாடுகள் தீவிர நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்க பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விளையாட்டு நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலாசார நிகழ்வுகள் உலகம் முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் 6 மாநிலங்களில் திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்படுகின்றன.
அமெரிக்க மாநிலங்களான ஒஹையோ, மிஸ்சிகன், ஓரிகன், மேரிலன்ட் , கென்ரக்கி மற்றும் நியூ மெக்ஸிகோவில் உள்ள பாடசாலைகள் திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பிரெஞ்சுப் பாடசாலைகள் திங்கள் முதல் 15 நாட்களுக்கு மூடப்படுகின்றன. அதே நேரத்தில் பெல்ஜியத்தில் பாடசாலைகள் ஈஸ்ரர் வரை மூடப்படும்.
ஜேர்மனிய மாநிலங்களான பவேரியா மற்றும் சார்லண்ட் ஆகியவை ஏப்ரல் பிற்பகுதியில் ஈஸ்ரர் விடுமுறைகள் முடியும் வரை பாடசாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேர்லின் அடுத்த வாரம் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மற்றும் கர்நாடகாவில் மாநில அரசுகள் பாடசாலைகளையும் கல்லூரிகளையும் மூடியுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை அயர்லாந்து, ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல் மற்றும் பொலிவியா, நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டன.
பாடசாலைகள், தேநீர்ச் சாலைகள், உணவகங்களை மூடுவது, கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ரத்துச் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் மற்றும் ஐரோப்பிய லீக் உட்பட அனைத்துக் கால்பந்துப் போட்டிகளும் பிற்போடப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள 118 நாடுகளில் 138,600 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,083 ஐத் தாண்டியுள்ளது.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மிக அதிகமான எண்ணிக்கையாகும். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது.
நன்றி bbc.co.uk
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo