யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!

தோ்தல் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை இழந்த பின்னரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கிவந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து குறித்த விடயம் தொடா்பாக மாவட்ட செயலாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது.

எனினும் அதனை உதாசீனம் செய்து நேற்றைய தினமும் மாவட்டச் செயலகத்திலுள்ள அலுவலகம் இயங்குவதனை அவதானித்ததை அடுத்து, அது தொடர்பில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த அலுவல கத்தை தேர்தல் முடியும் வரையில் இயக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையிலும் குறித்த அலுவலகம் தொடர்ந்து இயங்குவதனால் இன்றுடன் மூடி சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிகப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.