இஞ்சி ஊறுகாய் - ஆரோக்கிய உணவு!!

தேவையான பொருட்கள் :


இஞ்சி - 1 கப்
மிளகாய் தூள் - கால் கப்
மல்லித் தூள் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - அரை கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 10 பற்கள்

தாளிக்க :

எண்ணெய் - ½ கப்
கடுகு - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
வத்தல் மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை :

* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பனங்கட்டியை  துருவிக் கொள்ளவும்.

* சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் இஞ்சி, புளி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* பின்பு அதனுடன் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

* எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

சுவையான இஞ்சி ஊறுகாய் தயார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.