கொரோனா பதிப்பு - இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்!!

அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


நாங்கள் இங்கு விட்ட தவறுகளிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் வீதிகளில் இறங்கத் தடை! காவல்துறையினர் தொடர்ந்து நடந்துகொண்டு, வீட்டிற்கு வெளியே வரும் யாரையும் கைது செய்கிறார்கள்.

எல்லாம் மூடப்பட்டுள்ளது! வணிகம், மால்கள், கடைகள், இயக்கம் இல்லாத அனைத்து தெருக்களும். உலக முடிவின் உணர்வை எமக்கு தருகிறது.

நான் வாழும் நாடான இத்தாலி இருண்ட யுத்தநாடு போல மாற்றப்பட்டுள்ளது! இப்படி ஒரு சூழலில் நான் ஒருபோதும் வாழ்வேன் என்று நினைத்ததில்லை! மக்கள் குழப்பமாகவும், சோகமாகவும், ஆர்வமற்றவர்களாகவும், உதவியற்ற வர்களாகவும் உள்ளனர்.

மேலும் இந்த யதார்த்தம் அவர்கள் மீது எவ்வாறு திணிக்கப்பட்டது என்பதையும், இந்த கொடிய நிலை எப்போது முடிவடையும் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெரிய தவறு என்னவென்றால், முதல் அறிகுறிகளின் ஆரம்பத்தில் மக்கள் வழக்கம் போல் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்! வேலை, பொழுதுபோக்கு மற்றும் விடுமுறைக் காலம் போன்ற உணர்வுகளுக்காக வீதிகளில் இறங்கினர்! எனவே நண்பர்களுடனும் விருந்துகளுடனும் கூட்டங்களாக ஒன்று கூடினர்! எல்லோரும் இவ்வாறு தவறு செய்தார்கள்! நீங்களும் அப்படித்தான்! என நினைக்கிறேன்.

நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், கவனமாக இருங்கள், இது ஒரு சிரிப்போ நகைச்சுவையோ அல்ல! உங்கள் அன்புக்குரியவர்களையும், உங்கள் பெற்றோரையும், உங்கள் தாத்தா பாட்டிகளையும் பாதுகாக்கவும்! இந்த நோய் அவர்களுக்கு ஆபத்தானது.

ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேர் இங்கு இறக்கின்றனர், ஏனெனில் மிலனில் இதை எதிர்க்க மருந்து இல்லை! (இது உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாகும்). மாறாக அனைவருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாததால்! யார் இறப்பார்கள் என்பதை மட்டுமே மருத்துவர்கள் தேர்வு செய்கிறார்கள்!

அவரவர் தம் சுயநலத்தால் குடிமக்களைப் பொருட்படுத்தாமல், வழக்கம்போல தங்கள் வாழ்க்கையைத் தொடர முடிவு செய்த முட்டாள் தனத்தால் மட்டுமே இந்த நிலை! இல்லாவிட்டால் பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்திருக்கும்.

தயவுசெய்து எங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் ஒரு சிறிய நாடு இப்போது ஒரு பெரிய சோகத்துடன் போராட வேண்டியுள்ளது!இப்போது நன்றாகக் கேளுங்கள்.

சன நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.
பொது இடங்களில் சாப்பிட வேண்டாம்.
இந்த நேரத்தில் வீட்டில் அதிக நேரம் இருங்கள்!
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கேளுங்கள் (அதை விளையாட்டாக எடுக்க வேண்டாம்!).
ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்தவரை ஒரு மீட்டர் தொலைவில் இருந்து பேசுங்கள்.
அருகில் வர வேண்டாம் கைகுலுக்க வேண்டாம். கட்டியணைக்க வேண்டாம்.
பாதிக்க பட்டவர்கள் தடுப்பு சிகிச்சையைப் பெற்று மற்றவரகளுக்கு பரவாமல் தடுக்கும் உயர்ந்த சேவையை கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி எடுக்க பரிந்துரைக்கிறோம்.
தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் உதவுங்கள்
இத்தாலியில், முழு நாடும் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது! அதாவது 60 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

ஆரம்பத்தில் இருந்தே மக்கள் அறிவுறுத்தல்களைக் கேட்டிருந்தால் இது தடுக்கப்பட்டிருக்கும்.


உங்களையும் நீங்கள் விரும்பும் ஒருவரின் வாழ்க்கையையும் இந்த தற்காப்பு மூலம் கவனித்துக் கொள்ளுங்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.