லண்டனில் பல அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன!!

அரசாங்கம் விடுத்துள்ள ஆலோசனைக்கு அமைய தலைநகரின் பல அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.


தேசிய திரைப்பட அரங்கம் என்று அழைக்கப்படும் பிஎஃப்ஐ சவுத் பாங்க் (BFI Southbank) உடனடியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேட் மோர்டென் (Tate Modern) என அழைக்கப்படும் லண்டன் நவீனக் கலைக்கூடம் மற்றும் ரேட் பிரிட்டன் (Tate Britain) என அழைக்கப்படும் லண்டன் மில்பாங்கில் உள்ள கலை அருங்காட்சியகம் ஆகியன மே 1 ஆம் திகதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறந்த நிலையில் உள்ளது. இருப்பினும் அரசாங்கத்தின் மேலதிக வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எமது ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பே எங்களது முழுமையான முன்னுரிமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.