வடமாகாண மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்திய முக்கிய விடயங்கள்

இன்று வட மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்ற  COVID -19  ( கொரோனா வைரஸ் தாக்கம் )   வடமாகாணம் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன்  தயாராவது     மற்றும் எதிர்கொள்வது (Preparedness & Response)   தொடர்பாக  பல்துறைசார் (Multisector ) கலந்துரையாடலில்   மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்திய முக்கிய  விடயங்கள்


1.வட மாகாணத்தில் நோய்த்தொற்றுக்குள்ளான எவரும்    இதுவரை   இனங்காணப்படவில்லை ஆனாலும் அலட்சியமாக இருக்காது  தற்போதும் எதிர்வரும் வாரங்களிலும் பொதுமக்கள் அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவதானமாக இருக்கவேண்டும்; தேவையற்று வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
2. மணித்தியாலத்துக்கு ஒரு முறையாவது கைகளை சவர்க்காரமிட்டு / வேறு தொற்று நோக்கிகளைப் பயன்படுத்திக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவை சாடி வருவோருக்கு இவ்வசதியை ஏறபடுத்திக் கொடுத்தல் உகந்தது. .மேலும் அடிப்படை சுகாதாரமுறைகளான கைக்குட்டையால் வாயை மூடி தும்முதல், இருமுதல் என்பவற்றைப் பின்பற்றவும்.
3.இயன்றவரை அத்தியாவசிய தேவை தவிர்ந்த பெருமளவான பொது ஒன்று கூடல்களை ( பெருமளவான மக்கள் கூடும் ஆலய வழிபாடு, கொண்டாட்ட விழாக்கள், மரணச்சடங்கு முதலியன ) தவிர்க்கவும்.
4. தற்போது நோய் அதிகரிப்பு வீதம் கூடியதாக உள்ள  ஈரான், இத்தாலி , தெ.கொரியா, அவுஸ்ரேலியா, பி(f)ரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெய்ன், சுவிஸ், UK, பெல்ஜியம், நோர்வே முதலிய 14 நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ள நாடுகள் ஆகும் .இந்தநாடுகளிலிருந்து மார்ச் முதலாம் திகதிக்குப் பின் இலங்கைக்கு வருகை தந்த புலம்பெயர்ந்தவர்கள் ( இவர்கள் சில வேளை நோய்க்காவிகளாக இருக்கலாம்) தொடர்பில் உங்கள் பகுதி கிராம சேவகர், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் (PHI ),    ஆகியோருக்கு அறிவிக்கவும்
5. மேற்கூறப்பட்ட நாடுகளிலிருந்து வருகைதந்தோர் சுய தனிமைப்படுத்தலில் இருவாரகாலம் இருத்தல் மிக அவசியமாகும் (  நோய் அறிகுறிகளை இனங்காண்பதற்கும் உறுதிப்படுத்தவும் ).இதற்கு ஒத்துழைக்காதவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. பராமரிப்பு நிலையங்கள் முக்கியமான முதியோர் இல்லங்களுக்கு மேற் கூறப்பட்ட நாடுகளிலிருந்து ஒருமாத காலத்துக்குள் வருகை தந்தோர் வருகை தருவதை இயன்றவரை தவிர்க்கவும். 
7.COVID-19 க்குச் சிகிச்சையளிக்கவோ, இனங்காணவோ முயல்வதை தனியார் வைத்தியசாலைகள் முற்றாகத் தவிர்க்கவும்.
8.பொதுப் போக்குவரத்து சாதனங்களை சேவையின் பின்னர் அடிக்கடி குளோரின் இட்டுக் கழுவுமாறு CTB  மற்றும் தனியார் போக்குவரத்துத் துறையினர் அறிவுறுத்தப்பட்டனர்.
9.மிக அவசிய தேவை தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு பிரதேச செயலகங்கள் முதலிய அரச திணைக்களங்களுக்குச் செல்வதைக் கூடுமானவரை தவிர்த்தல்.
இதனை விட அந்தந்தத் திணைக்களத்தால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளும் வலியுறுத்தப்பட்டிருந்தன.
Blogger இயக்குவது.