குட்டி அஸ்வந்த்தின் வைரல் வீடியோ!!!

கொரோனா பாதுகாப்பு குறித்து உலகத் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விழிப்புணர்வு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான நடிகர் அஸ்வந்த் கொரோனா பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


அதில், “கொரோனா பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை, ஒவ்வொரு தட்ப வெட்ப நிலைக்கும் ஏதாவது வைரஸ் பரவுவது இயல்பு, அதுக்குறித்து பயப்படாமல் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளுங்கள்...“ என்று தன்னுடைய அழகான குழந்தை மொழியில் தெரிவித்து இருக்கிறார். இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சின்னத் திரையில் கலக்கி வந்த அஸ்வந்த் தற்போது வெள்ளித்திரையிலும் பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சூப்பர் டீலக்ஸ், சுந்தர காண்டம் படத்தில் தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டை பெற்றவர் தற்போது வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவால் நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.