அவெஞ்சர்ஸ் பட நடிகர் கொரோனாவால் பாதிப்பு!!

கொரோனா வைரஸிற்கு உலகம் முழுவதும் இதுவரை 1,83,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 146 நாடுகளுக்கு மேல் கொரோனா தொற்றானது பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் 130 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல பிரபலங்களும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா பிரதமரின் மனைவியும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விளையாட்டு வீரர்கள் பலருக்கும் வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவென்ஜர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தில் நடித்திருந்த இட்ரிஸ் எல்பா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், "கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருந்தாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். பயம் தேவையில்லை" என கூறியிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.