லண்டனில் நிலக்கீழ் ரெயில் சேவை நிலையங்கள் பூட்டு!!

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் லண்டன் போக்குவரத்து வலையமைப்பு முழுவதும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


லண்டன் நிலக்கீழ் ரெயில் சேவைகளின் ஒருபகுதி நிறுத்தப்படுகின்றது. அத்துடன் 40 நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன.

செயற்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக இன்று காலை பல ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

வோற்றர்லூ மற்றும் சிற்றி லைன் ரெயில் சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படவிருக்கிறது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் இயங்கும் இரவுநேர நிலக்கீழ் ரெயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

லண்டன் போக்குவரத்துப்பிரிவு போக்குவரத்துச் சேவைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

இதனால் நிலக்கீழ் ரெயில் சேவைகள், நிலத்திற்கு மேலான ரெயில் சேவைகள், ரி.எஃப்.எல் ரெயில், டி.எல்.ஆர் மற்றும் ட்ராம் சேவைகள் அனைத்தும் குறைக்கப்படவுள்ளன.

அத்தியாவசியப் பயணங்களுக்காக இரவு நேர பஸ் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவிக்கையில்;

லண்டன் மக்கள் அவசியமில்லாமல் சமூகத் தொடர்புகளைத் தவிர்க்கவேண்டும். அதாவது போக்குவரத்து வலையமைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு லண்டன் வாழ் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மூடப்படும் ரெயில் நிலையங்கள்

Bakerloo line

Lambeth North
Regents Park
Warwick Avenue
Kilburn Park
Charing Cross
Central line

Holland Park
Queensway
Lancaster Gate
Chancery Lane
Redbridge
Circle line

Bayswater
Great Portland Street
Barbican
District line

Bow Road
Stepney Green
Mansion House
Temple
St James’s Park
Gloucester Road
Jubilee line

Swiss Cottage
St John’s Wood
Bermondsey
Southwark
Northern line

Tufnell Park
Chalk Farm
Mornington Crescent
Goodge Street
Borough
Clapham South
Tooting Bec
South Wimbledon
Hampstead
Piccadilly line

Caledonian Road
Arsenal
Covent Garden
Hyde Park Corner
Bounds Green
Manor House
Victoria line

Pimlico
Blackhorse Road
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.