சட்டத்தை மதிக்காத 2036 பேர் கைது!!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.


இதில், நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இநிலையில் , ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல், அச்சட்டத்தை மீறி, 2036 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல், 23 ஆம் திகதி இரவு 9 மணிவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த காலப்பகுதியில், பயணித்த முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 501 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
Blogger இயக்குவது.