காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த பொருள்!

வடக்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடலில் மிதந்து கொண்டிருந்த 281 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.


நேற்றையதினம் குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலுக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்ரினை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அதனை கைப்பற்றி சோதனையிலீடுபட்டனர்.

இதன்போது பொதியில் 281 கிலோகிராம் ஈரலிப்பான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

இந்நிலையில் கஞ்சாவை எடுத்து வந்த கடத்தல்காரர்கள், கடற்படை படகை கண்டதும் அதை கடலுக்குள் வீசியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.