இளம் கர்ப்பிணிப்பெண் கிளிநொச்சியில் திடீர் மரணம்!!

கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று காலையிலிருந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டபோதும் அதனைப் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று பிற்பகல் திடீரென மயங்கிவிழுந்ததை அடுத்து தர்மபுரம் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் குறித்த இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கருவானது கர்பப்பைக்கு வெளியே தங்கியதனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கே யுவதியின் உயிரிழப்புக்கு காரணம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2007 ஆம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற முதல் கர்ப்பகால மரணம் இது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாய்மார்களுக்கு கர்ப்பகாலங்களில் ஏற்படும் ஏற்படும் வயிற்றுவலி, தலைசுற்றல், வாந்தி என்பவற்றினை சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக வைத்தியரிடம் சென்று தகுந்த ஆலோசனையினை பெறுமாறு சுகாதாரத்துறையினர் கர்ப்பிணி தாய்மார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.