கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முதலாவது கட்டம் வெற்றி - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிவேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நம்பிக்கையளிக்கும் வகையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முதலாவது கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அடீனோ வைரஸ் தடுப்பூசி வெக்டர் (Adenovirus Vaccine Vector) மற்றும் சார்ஸ் கொரோனா-2 புரதம் (SARS-CoV-2 Spike Protein) அடிப்படையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வைரல் வெக்ரர்ட் (Viral Vectored) தொழில்நுட்பம் சிறந்ததாகக் கருதப்படுவதால், சோதனை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இங்கிலாந்தின் தேம்ஸ் பள்ளத்தாக்கில் இருக்கும் ஆய்வகத்தில் இதற்கான கிளினிக்கல் சோதனைகளை நடத்துவதற்காக 18 வயது முதல் 55 வயது வரையுள்ள 510 தன்னார்வலர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 இல் மேற்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய எபோலா வைரசைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo