ஓய்வூதியம் வீடுகளுக்குச் சென்று வழங்க திட்டம்!!

மக்களின் ஓய்வூதியம் மற்றும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு என்பவற்றை வீடுகளுக்கே அனுப்பி வைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


அத்தோடு சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கவும், அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரச அலுவலர்களான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும் 23 இலட்சம் சமூர்த்தி கொடுப்பனவைப் பெறும் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாத காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும், பிரதமர் அனுமதியளித்துள்ளனர்.

அத்துடன் ஓய்வூதிய முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பிரதமர் மஹிந்த ராஜபச்வின் அனுமதியின் கீழ் ஓய்வு பெற்றோர், முதியோர் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.