இராணுவத்தின் புதல்வியும் தமிழ் அரசியல் கைதியின் புதல்வியும் - உரையாடல்!!


ஆனந்த சுதாகரின் மகள்...👉 எங்கட அப்பாவைப்போல உங்கட அப்பாவும் ஜெயில்லயா இருந்தவர்..?


சுனில் ரத்னாயக்க மகள்...👉 ஓம் எங்கட அப்பாவும் ஜெயில்லதான் இருந்தவர்.உங்கட அம்மா எங்க..?

சுதாகரின் மகள்...👉 எனக்கு அம்மா இல்லை.எங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்கிறார்,அவரும் இப்ப ஜெயில்ல இருக்கிறார்,

சுனில் மகள்...👉 எனக்கு அம்மாவும் இருக்கிறா இப்ப அப்பாவும் ஜெயில்ல இருந்து வந்திட்டார்.

சுதாகரின் மகள்...👉 உங்கட அப்பா என்ன தப்பு செய்தவர்,ஏன் ஜெயில்ல இருந்தவர்.

சுனில் மகள்...👉 எங்கட அப்பா மிருசுவிலில ஒரு சிறுவன் உட்பட 8 பேரை அடித்துக் கொலை செய்ததுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜெயில்ல இருந்தவர்.உங்கட அப்பா என்ன செய்தவர்..?

சுதாகரின் மகள்...👉 எங்கட அப்பா ஒன்றுமே செய்யாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தில சந்தேகத்தில கைதுசெய்யப்பட்டு ஜெயில்ல இருக்கிறார்.

சுனில் மகள்...👉 அப்படியென்றா உங்கட அப்பா கொலை எதுவும் செய்யாமலா ஜெயில்ல இருக்கிறார்.

சுதாகர் மகள்...👉 ஓம் எங்கட அப்பா ஒரு அப்பாவி,தப்பு செய்யாமல்தான் சந்தேகத்தில கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார்,

சுனில் மகள்..👉சின்ன பையனைக் கொலை செய்த எங்கட அப்பாவையே விடுதலை செய்தவர் ஜனாதிபதி அங்கிள். உங்கட அப்பாவையும் விடுவார் என்று நினைக்கிறன்.

சுதாகர் மகள்..👉மைத்திரி அங்கிள் எங்கட அப்பாவை விடுதலை செய்றதென்று சொன்னவர்.ஆனால் விடாமல் போட்டார்.

சுனில் மகள்...👉 எதுக்கும் நீங்கள் இப்ப ஜனாதிபதியாக இருக்கிற கோத்தா அங்கிளிட்ட கேட்கலாம்தானே உங்கட அப்பாவை விடச்சொல்லி,

சுதாகர் மகள்...👉 2019-10-28 அன்று இப்போதைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில வச்சு சொன்னவர். தான் தேர்தலில வென்றா அரசியல் கைதிகளை விடுதலை செய்வனென்டு,ஆனால் இன்றுவரை விடேல

சுனில் மகள்...👉 இப்போது நான் உங்களிற்கு என்ன செய்ய வேண்டும்..?

சுதாகர் மகள்...👉 அப்பா இல்லாமல் நீங்கள் எவளவு கஸ்ரப்பட்டிருப்பீர்கள்,அந்தவலி உங்களிற்கு தெரியும்தானே.எனக்காக ஜனாதிபதி அங்கிளோட கதைக்க மாட்டீங்களா..?எங்கட அப்பாவை விடச்சொல்லி.

சுனில் மகள்...👉 எங்கட அப்பா ஆமி,அதாலதான் ஜனாதிபதி அங்கிள் அப்பாவை விட்டவர்.

சுதாகர் மகள்...👉 உங்கட அப்பாக்கு இனி பதவி உயர்வோட வேலை.நாங்கள்தான் சாப்பிடக்கூட வசதி இல்லாமல் கஸ்ரப்படுறம்

சுனில் மகள்...👉 சரி சரி கவலைப்படாதையுங்கோ.அடுத்த தேர்தல் வரட்டும், ஜனாதிபதி அங்கிளிட்ட சொல்லி ஏதாவது உதவி செய்கிறம்.


*பிரபாஅன்பு*


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.