சமகால அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! மீண்டும் களமிறங்கும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர்

சமகால அரசாங்கத்தின் பிரபலத்தன்மை குறைத்து வருவதால் நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரா குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நாடாளுமன்றத்தை நடத்தி செல்ல முடியும். எனினும் அரசாங்கத்தின் பிரபலத்தன்மை வேகமாக வீழ்ச்சியடைவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இன்றைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி இல்லை என்றால் ஓரிரு நாட்களில் அது மாற்றம் ஏற்படலாம் எனவும் அதனை மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவினாலேயே தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதம் காணப்பட்ட அரசாங்கத்தின் பிரபலத்தன்மை தற்போது வரையில்ல குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுளு்ளார்.

செப்டெம்பர் மாதம் வரை நீடித்தால் அரசாங்கத்தின் நிலை என்னவாகும் என்பதனை உணர்ந்தே நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவத்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான சுமனதாஸ அபேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டமையினால், மஹிந்த தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.