திடீரென பல முகாம்களை அமைக்கும் ஸ்ரீலங்கா! காரணம் என்ன?

மேற்கத்தேய நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினையடுத்து அந்நாடுகளிலிருந்து ஸ்ரீலங்கா திரும்புவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்வதற்கான பல முகாம்களை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.



இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவாக காணப்படும் தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களை கண்காணிக்க மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களை கண்காணிக்கும் வசதி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் தியதலாவை போன்ற இடங்களில் உள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு அல்லது மூன்று இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாடு திரும்பிய 16பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.