இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக அறிவித்தது சுவீடன்

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக சுவீடன் அறிவித்துள்ளது.

சுவீடனுக்கான இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நட்புறவு செயலமர்வு ஒன்றில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கான சுற்றுலாப்பயணப் பொதிகளை வழங்கவும் அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக அறிவித்த முதலாவது ஐரோப்பிய நாடாக சுவீடன் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.