பூட்டப்பட்டது பதுளை மாவட்டத்தில் நான்கு நகரங்கள்!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், பதுளை மாவட்டத்தில் நான்கு நகரங்களை திறப்பதில்லை எனபொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


அந்தவகையில் வெலிமட, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய நான்கு நகரங்களே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மூடப்பட்டிருக்கும் என பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த நகரங்களிலிருந்து வெளி இடங்களுக்கு மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது, மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதால், வைரஸ் தொற்றக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு, நான்கு நகரங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் இன்று கடைகளை முற்றாக மூடியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.