தீப்பற்றியது குடிசை- காவலரும் தீயில் எரிந்து உயிரிழப்பு!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்தவரும் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலையில் பழுகாமத்தினைச் சேர்ந்த ரி.சண்முகம் என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வயலுக்கு காவல் இருக்கும் அவரது குடிசை, வயல்களை அண்டிய ஒதுக்குப் புறத்தில் இருந்ததன் காரணமாக தீச்சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாருக்கும் தெரியாத நிலையில் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.