தப்பி ஓடிய கடற்படை சிப்பாய் சரணடைவு!!
கல்பிட்டி முகத்துவாரம் கடற்படை முகாமில் கடற்படை அதிகாரி ஒருவரை கொலை செய்து, இரண்டு கடற்படையினருக்கு படுகாயத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற கடற்படை சிப்பாய் இன்று ஈச்சங்காடு கடற்படை முகாமில் சரணடைந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி முகத்துவாரம் கடற்படை முகாமில் கடமையாற்றிய தலைமை கடற்படை சிப்பாயான பீ.ஏ.ஆர்.ஆர். ஹேரத் என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இரவு நடந்துள்ளதுடன் அதில் கே.எஸ். விஜேவீர என்ற கடற்படை சிப்பாய் உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த கடற்படை அதிகாரி டப்.எம்.டி.எஸ். குமாரசிங்க மற்றும் கடற்படை பொறியியலாளர் ஏ.ஏ.எஸ்.எம். அத்துகோரள ஆகியோர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
தற்போது காணப்படும் நிலைமையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளை நடத்த முடியாதுள்ளதுடன் புத்தளம் வைத்தியசாலையின் இன்று நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த சந்தேக நபரை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)