சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டது!

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.


சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து கடமைகளை செய்து வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும், அவசர தூதரக உதவிகளுக்கு, பின்வரும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

(Consular Emergencies) +65 87414011/ +65 86546759/ Email: slhcs@lanka.com.sg

(Migrant Workers, including Fdws) + 65 84981785/ 91810257 Email: lypathi@lanka.com.sg

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றதுடன் தற்போது வரையில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 766,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.