மீறப்பட்ட வாழ்வியல்!!

எங்கும், எதிலும் வரைமுறையற்ற வாழ்க்கை வாழ பழகிவிட்டது இச் சமூகம்.

மனித தேவைகளுக்கு அப்பாற்பட்ட சுதந்திரங்களைத் தாண்டி தன் சுய அற்ப சுகங்களுக்காக வேலி தாண்டி கட்டுபாடுகளை சிதைக்கும் மதயானைக் கூட்டமாய் மாறிப்போனது இச் சமூகம்.


எல்லைக் கோடுகள்தான் சுதந்திரம் என்பதை உணராமல் எண்ணம் போல் வாழ்தல்தான் சுதந்திரமென்று தவறுதலான புரிதலுடன் பயணிக்கிறது
இச் சமூகம்,

கட்டுப்பாடுகளற்ற ஒரு முழு நிர்வாணத்தைதான் முழு சுதந்திரமென்று நம்புகிறது.

மிருகங்களாய் வாழ்ந்த ஆதிகால வாழ்க்கை முறையிலிருந்து கொஞ்சம்,கொஞ்சமாய் தன் வாழ்க்கை முறையை வரையறுக்க தொடங்கும் போதுதான் நாகரீகம் வளர்ந்தது.
வரையறுக்கப்படாத எந்த விசயங்களும்
நன்மை பயக்கபோவதில்லை,மாறாக ஆபத்தையே தேடித் தரும்,,,

அந்த வரைமுறையான வாழ்க்கையைத்தான் சுதந்திரமென்று புரிந்து கொள்பவர்களால் மட்டுமே வாழ்க்கையின் தெளிவான பாதைகளை
அமைக்க முடியும்,,,

அதை கட்டுப்பாடுகளென்றோ! அடிமையென்றோ! சிறையென்றோ! அதில் தான் கைதியென்றோ அதன் உயிரோட்டம் உணராமல் அதை தகர்த்தெறியும் போதுதான் நம் சுயம் தொலைந்து மனித அடையாளத்தை தொலைக்கிறோம்,

ஒரு சுதந்திரத்தை வரையறுக்க முடியாதவர்களால் ஒருபோதும் தன் இறக்கைகளை விரித்து நீண்ட தூரம் பயணிக்க இயலாது,

இதுதான் வாழ்க்கை முறை, இப்படிதான் வாழ வேண்டும் என்று தன்னைத்தானே ஒரு சுதந்திர வரையறைக்குள் உடன்படுத்திக் கொள்பவர்களால் மட்டுமே சுதந்திரமாக பறக்க முடியும்,நினைத்த இலக்கை அடைய முடியும்,,,

சிற்றின்பம் தேடும் சுதந்திர இறக்கைகள் ஒருபோதும் தன் கரைகளை கடப்பதில்லை, தொடங்கும் இடத்திலேயே முடிந்து போகிறது அவர்களது வாழ்க்கை,

அவரவர்களுக்கு எவர் தூண்டுதலுமில்லாமல் தனக்குத்தானே வரையறுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறைதான் சுதந்திரம்,. வரையறை வகுத்து கொள்தலும், அடிமைத்தனமும் ஒன்றல்ல வேறு என்ற சுதந்திர புரிதல் இருந்தாலே போதும், உங்கள் இறக்கைகள் வானத்தை நோக்கி பயணிக்கக் கூடும்,,,,

ஒருபோதும் வரையறுத்து வாழும் வாழ்க்கை அடிமையல்ல,,, வரைமுறையை மீறி வாழும் வாழ்க்கை சுதந்திரமல்ல,,,,
-------------------
சுயம்பு


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.