யாழில் கொங்கிரீட் பொருத்து வீடுகளிற்கான காசோலை வழங்கிவைப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (02) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) எஸ்.முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்தகால மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு கொங்கிரீட்பொருத்து வீடுகளிற்கான காசோலைகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.
Powered by Blogger.