யாழ் சென்.ஜோன்ஸ் மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு!

யாழ் பரியோவான் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது பழைய மாணவர்களாக ஒன்று கூடி கைதடி முதியோர் இல்லத்தில் அவர்கள் நேற்று செய்த செயற்பாடு அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வருடாவருடம் வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த வருடமும் அது நெருங்கியுள்ளது .குறிப்பாக இக்காலப்பகுதியில் பாடசலை பழைய மாணவர்களும் தேவையில்லாத செலவுகள் மற்றும் ஆடம்பர செலவுகளை மேற்கொள்வது வழமை..
ஆனால் இம்முறை முற்றிலும் மாறுபட்ட வகையில் யாழ் சென் .ஜோன்ஸ் கல்லூரி அண்மையில் வெளியேறிய பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து
(Red & Black volunteers ) கைதடி முதியோர் இல்லத்தில் ஒன்று சேர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிரத்து கடந்த 7 நாட்களாக தாம் சேகரித்து அனைத்து உதவிப்பொடுட்களுடனும்,
தம்மால் சேர்த்து வைக்கப்பட்ட சிறிய பணத்தொகையையும் ஒன்று  சேர்த்து கையளித்தார்கள் . அத்தோடு தமது பொழுதை ஆதரவற்ற அந்த ்அம்மா அப்பாக்களுடன் செலவளித்து
அனைத்து முதியவர்களையும் தம் பேச்சாற்றலால் இன்பமாக்கி அவர்களின் முகங்களில் ஒரு ஆறுதலையும்

அத்தோடு மட்டுமல்லாது அவர்களுக்கான ஆடல், பாடல் நிகழ்வுகளை உடனடியாக அரங்கேற்றி அதில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி அதிகளவான நேரத்தை செலவழித்து அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொண்டு அவர்களை அரவணைத்தவிதம் பாராட்டுக்குரியது.

அத்துடன் மேற்குறித்த மாணவர்கள் தங்களுடைய சேவைகளை இத்துடன் விட்டுவிடாமல் தமது சேவையை வருங்காலத்திலும் தொடரவுள்ளனர் என உறுதியளித்துள்ளார்கள்.


Powered by Blogger.