சகோதரி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மற்றுமோர் சகோதரியின் அவல நிலை

கொழும்புத்துறை- குருநகர் பிரதான வீதியில் கடந்த 20ம் திகதி வீதியினை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி குடும்ப பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


ஜோன்சன் வலன்சன் ஜெகதீஸ்வரி வயது 42 என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த செய்தியை அறிந்த சகோதரி அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

ஜோஜ் கெனடி றஞ்ஜினி வயது 57 என்ற உடன்பிறந்த சகோதரியே உயிரிழந்தவர் ஆவார். அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மேற்படி பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இந்த இரண்டு மரணங்களும் குருநகர் பகுதியினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Powered by Blogger.