மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்டப் போவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தன் தாய்க்கு கோயில் கட்டிய இவர், அறக்கட்டளை மூலமாக ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்ட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது; “மத வேறுபாடுகளைக் கடந்து, ‘மனிதம்தான் பெரிது’ என்பதை உணர்த்தும் வகையில் மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்ட உள்ளேன்.

மூன்று மதத்தினரையும் பிரிக்க முடியாத வகையில், அவர்கள் ஒன்றாக வந்து வழிபடும் வகையில் இந்தக் கோயில் இருக்கும்
Powered by Blogger.