கொரோனா வைரஸ் தடுப்பு – 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தெலுங்கானா அரசு, 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.


மேலும் கொரோனா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெலுங்கானாவின் சுகாதாரத் துறை அமைச்சர் எடேலா ராஜேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

இந்த வைரஸால் பாதித்தவர்களில் உயிரிழப்பு விகிதம் என்பது 2 – 3% ஆகவே உள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இது குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. யாருக்காவது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் தொல்லை இருந்தால் நிச்சயம் அவர்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

பள்ளிச் சிறுவர்கள் உட்பட அதிகமானோர் கூடும் இடங்களில் இருப்போர் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Blogger இயக்குவது.