பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவுமானால் வேலை செய்பவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் நோய்வாய்ப்பட்டலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்போது பொலிஸார், மிகக் கடுமையான குற்றங்களைக் கையாளவும் பொது ஒழுங்கைப் பேணுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவர் என்று கூறப்படுகின்றது.

தேவைப்பட்டால் அவசரகாலச் சேவைகளுக்கு ராணுவத்தின் உதவி பெறப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளை மூடுவது, மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்ப்பது மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அவசரகால மருத்துவமனைப் பராமரிப்பு தாமதமாகலாம் எனவும் அதே நேரத்தில் அண்மையில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

முடிந்த அளவிற்கு அனைத்தையும் கையாள அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அதன் முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.