மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்.

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் விலகியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்.


கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட ஜெனிவா தீர்மானத்தில் இருந்து முற்றாக விலகுவதாக இலங்கையின் புதிய அரசு அறிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக கடமை வகித்து வந்த செல்வி அம்பிகா - சற்குணநாதன் தான் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் பதவி வகித்த ஒரே ஒரு தமிழ் பிரதிநிதி இவர் ஆவார். இவரின் இராஜினாமா சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடியை தோற்றுவிக்க கூடும் இலங்கை மனித உரிமை விடயத்தில் பாராபட்சமற்ற விதத்தில் நடந்துகொள்ளாது என்ற முடிவுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blogger இயக்குவது.