சீனா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!!
ஆனால், உலகில் 87 நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது வரை இந்த தொற்றினால் 3311 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சீனாவில் மாத்திரம் மரணமானவர்களின் எண்ணிக்கை 3013 ஆகும். 96 ஆயிரம் பேர் இதுவரை கொரேனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றினால் பாதிக்கப்பட்ட 53 ஆயிரம் பேர் சிகிச்சையளிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சர்வதேச ரீதியாக 1800 பேர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனா மெல்ல தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டும் ஊடகங்கள், அங்கு வெகு விரைவில் சரியான நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றன.
ஆனாலும், உலக நாடுகள் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியிருப்பதானது பெரும் பொருளாதார சரிவில் இந்த நாடுகள் சிக்கப் போகின்றன என்றும் எச்சரிக்கின்றன.
இதன் தாக்கம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் பாரியளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச நாடுகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.