அம்பாறையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் திரண்ட மக்கள்!

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.


கல்முனை பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்துப் பொலிஸார் சீரமைத்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நற்பிட்டினை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.