நீ செய்யும் மெளன யுத்தம் எப்போது ஓயும் சொல்?

கொரோனாவே தீண்டாதே...!
என்று நான் சொல்ல
மாட்டேன் .
இயற்கையை மனிதன்
தீண்டியதால்...
இயற்கைக்கு
ஒய்வளிக்க

கொல்லும் காலனாய்..!
கோரக் கலி முடிவா..?
காரணமின்றி
கருணை சிறிதுமின்றி
உயிரை மாய்க்க
வந்ததேன் கொரோனா??
எனக்குத் தெரியும்
ஐந்தறிவு ஜீவனுக்கெல்லாம்
சுதந்திரமளித்துவிட்டு
ஆறாவதறிவை
கூண்டில் அடைத்தாய்

எல்லைகள் தாண்டி
உள்ள நாடெல்லாம் ஏகி
உயிரைப் பறிக்க
அதிகாரம் எங்கே பெற்றாய்??
அதுவும் தெரியும்
மானிடத்தை திருத்த
வந்த இறை தூதனென்பாய்

பதைக்குதே உன் வரவால்
பக்கத்தில் ஒருவர்
இருமி நின்றாலும்
பெருகுதே பயம்
கொரோனா என்று நடுங்கியே!!

சீனாவில் தோன்றிய
கொரோனா வைரசே!!
கொல்லாமல் கொல்லும்
காதல் போல் வந்தாயோ?

வல்லரசுகளும்
வாய்பிழந்து நிற்க
நீ செய்யும் மெளன யுத்தம்
எப்போது ஓயும் சொல்?
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.