அதிரடியாக தமிழ் இளையோர்கள் களத்தில்: கொரோனா தொற்று விழிப்புணர்வு 📷

வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள்.


தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா நோய் தொடர்பான பயிற்சிப்பட்டறையைத் தொடர்ந்து அவர்கள் இந்த விழிப்புணர்வுச் செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சமுகத்திலுள்ள தன்னெழுச்சி மிக்க இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணி அளவில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ந.சத்தியமூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதிகளின் தலைமையில் கொரோனா நோய் தொடர்பான ஒரு பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் ஊடாக பல்வேறு கருத்துக்களை வைத்தியர்கள் கூறியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக சமுக வலைத்தளங்களினால் பரப்பப்படும் சில தவறான தகவல்களின் ஊடாக இளைஞர்கள் மத்தியில் இந் நோய் தொடர்பில் ஓர் அச்ச உணர்வு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பொதுமக்கள் வீணான அச்ச உணர்வை தவிர்த்து நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருந்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் வைத்தியர்களோஅல்லது சுகாதார ஊழியர்களோ கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமக்கு மேலதிகமாக தன்னார்வ தொண்டர்களின் உதவி தேவைப்படின் அவர்களது செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு நிச்சயம் தாம் தயாராக இருப்பதாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.