இந்தியன் 2 விபத்து: கமலிடம் விசாரணை!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


நடிகர் கமல்ஹாசன் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் வேகமாகத் தயாராகி வந்தது. பூந்தமல்லியில் உள்ள இவிபியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிப்ரவரி 19 ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்குக் கமல் மற்றும் ஷங்கர் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநர் ஷங்கருக்கு மத்தியக் குற்றப் பிரிவு சம்மன் அனுப்பியது.

பிப்ரவரி 27ஆம் தேதி துணை ஆணையர் நாகஜோதி முன்பு ஷங்கர் ஆஜரானார். அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியன்-2 திரைப்படத்தின் நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டு அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை மத்தியக் குற்றப்பிரிவில் ஆஜரான கமலிடம் துணை ஆணையர் நாகஜோதி விசாரணை நடத்தி வருகிறார்.

கவிபிரியா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.