கொரோனா சந்தேகம் : ஐவர் கராபிட்டி வைத்தியசாலைக்கு


கொரோனா வைரஸ் தொற்று எனும் சந்தேகத்தின் பேரில் ஐவர் தற்போது காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் சந்தேகத்தின் பேரில் வருவோரை காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் விசேட பிரிவு ஒன்றினை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, மொத்தமாக 52 நோயாளர்கள் குறித்த பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.