கொரோனா பாதிப்பு : அகதிகள் நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா பாதிப்பால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வேலை செய்த பணியாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதுவரை ரயில்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலினால் சொந்த ஊருக்கு செல்வதற்கு போக்குவரத்தும் இல்லாமல், கையில் போதிய பணமும் இல்லாமல், உண்ண உணவும் இல்லாமல் அவர்கல் அகதிகள் போல ஆகியுள்ளனர்.


Powered by Blogger.